அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 241 ↗அருளுடைமை
Kurals 241–250
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 241 ↗நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 242 ↗அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 243 ↗மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 244 ↗அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 245 ↗பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 246 ↗அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 247 ↗பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 248 ↗தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 249 ↗வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 250 ↗